ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாவதாக புகார்
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கற்பழிப்பு மற்றும் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாவதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதை தொடர்ந்து ஒரு பெண்கள் அமைப்பு சமீபத்தில் ஒரு சர்வே மேற்கொண்டது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட சர்வேயில் 1500 மாணவிகள் வாக்களித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.அதில், பல்கலைக்கழகங்களில் படிக்கும் 6 மாணவிகளில் ஒருவர் கற்பழிக்கப்படுவதாக தெரியவந்தது. அதாவது 17 சதவீதம் பேர் கற் பழிப்பு கொடுமைகளுக்கு ஆளாவதாகவும், 12 சதவீதம் பேர் கற்பழிப்பு முயற்சியில் சிக்கியதாகவும் தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவங்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடப்பதாக அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்துள்ளன.
0 comments :
Post a Comment