கி.மாகாண விளையாட்டு போட்டிகள் அடுத்தவாரம்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன. இதன் முதல் கட்டமாக கபடி, எல்லே, கரப்பந்து போட்டிகள் எதிர்வரும் 24 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை அம்பாறை பொது விளையாடடு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
ஏனைய போட்டிகள் எதிர்வரும் 29 தொடக்கம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடத்தப்பட உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 கல்வி வலயங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் இந்தப்போட்டிளில் பங்கு கொள்ள உள்ளனர். மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகள் பொது விளையாட்டுப் போட்டிகளிலும், மெய்வல்லுநர் போட்டிகளிலும் பங்கு கொள்ள உள்ளனர்.
0 comments :
Post a Comment