Friday, June 17, 2011

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் பதவி நீட்டிப்பு .

ஐ.நா. சபை பொதுச் செயாலாளராக பான் கி-மூன் இருந்து வருகிறார். தென் கொரியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான இவரது பதவி காலம் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிகிறது. 2012 ஜனவரி முதல் இவரது பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை முடிவு செய்து, ஐ.நா. பொதுச் சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை பான் கி-மூனை முறைப்படி மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்க ஏற்கனவே முடிவு செய்து இருந்ததாக ஐ.நா. சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2012 ஜனவரி 1-ந் தேதி முதல் 2016 டிசம்பர் 31-ந் தேதி வரை பான் கி-மூன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பதவியில் நீடிப்பார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com