வெளிவரும் உண்மைகள் : துரோகத்துக்கு விலை உயிர்! சூதாட்ட மன்னன் வில்சன்
‘கேலோங் கிங்’ என்றழைக்கப்படும் சிங்கப்பூரைச் சேர்ந்த காற்பந்து சூதாட்ட மன்னன் வில்சன் ராஜ் பெருமாள் ஃபின்லாந்து நீதிமன்றத் தில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை வெளியிட்டார். காற்பந்து சூதாட்ட மன்னன் என்றழைக்கப்படும் வில்சன் ராஜ் கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஃபின்லாந்தில் கைது செய்யப் பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் காற்பந்து சூதாட் டத்தின் முக்கிய களமாக சிங்கப்பூர் விளங்குவதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்தது. சூதாட்டத்தை தடுக்க $35 மில்லியன் செலவில், இன்டர்போல் உதவியுடன் சிங்கப்பூரில் சூதாட்ட ஒழிப்பு அமைப்பு உருவாக்கப்படும் என ஃபிஃபா அறிவித்தது.
இந்நிலையில், கடந்த ஒன்பதாம் திகதி சூதாட்ட வழக்கிற்காக ஃபின்லாந்து நாட்டின் உள்ளூர் அணியான ரோவனைமி காற் பந்துக் குழுவைச் சேர்ந்த 9 வீரர் களும் வில்சன் ராஜும் பின்லாந்து நீதிமன்றத்தில் முன்னிலை யாயினர்.
சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த பலரும் அவருடைய சூதாட்டக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர். 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகமெங்கும் பல ஆட்டங்களை நிர்ணயித்ததாக வில்சன் ராஜ் ஒப்புக்கொண்டார்.
முக்கியமாக சீனாவில் நடந்த காற்பந்து போட்டிகளிலேயே அவர் கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஃபின்லாந்து நாட்டில் மட்டும் 11 உள்ளூர் லீக் போட்டிகளின் முடிவுகளை நிர்ணயம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், நான்கு போட்டிகளில் மட்டுமே அவர்களின் முயற்சி வெற்றி பெற்றது.
பல மில்லியன் யூரோக்களை லாபமாக அவர்கள் ஈட்டியுள்ளனர். குழு அமைத்து செயல்படும் இந்த சதி வேலைகளில், எவரேனும் ஒருவர் மற்றவர்களை ஏமாற்றி விட்டு, தாம் மட்டுமே பணத்தை அபகரிக்க முயன்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என வில்சன் தெரிவித்தார்.
“சூதாட்டத்தில் பங்குகொண்ட ஒருவர், மற்ற உறுப்பினர்களை வஞ்சித்துவிட்டு, லாபத்தை தாம் மட்டுமே அடைய எண்ணினால், மற்றவர்களிடம் இருந்து அவர் அதிக தொல்லைகளை எதிர் பார்க்கலாம்,” என வில்சன் கூறினார்.
இந்த சதிக் கும்பலில் ஆறு பேர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளனர். அவர்கள் அனை வரும் சிங்கப்பூர் மற்றும் குரோவேஷியா, பல்கேரியா, ஹங்கேரி, ஸ்லோவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளையோ சேர்ந்தவர்கள்.
ஒரு போட்டி நடக்கும் முன் னரோ அல்லது அல்லது போட்டி யின் போதோ வீரர்களுக்கு குறிப்புகள் வழங்கப்படும். போட்டி நடக்கும்போது, தாம் தலையில் தொப்பி அணிந்திருந் தால் ஆட்டம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதாகவும், தொப்பியைக் கழற்றிவிட்டால், ஆட்டத்தில் சூதாட்டம் நடக்கவில்லை எனவும் வீரர்களுக்குத் தெரிவிக்கப்படும். மேலும், வாய்மொழியாகவோ, அல்லது சைகைகள் மூலமோ வீரர்களுக்கு குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
போட்டிகளை ஏற்பாடு செய்வது, வீரர்கள், நடுவர்கள் மற்றும் காற்பந்து சங்கங்களைத் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் பங்கு கொள்ளச் செய்வது போன்றவை வில்சன் ராஜின் பணி. இந்த சூதாட்டக் கும்பலில் உண்மையாக நடந்து கொள்பவர்கள் சிறைக்குச் சென்றாலும் அவருக்கு உரிய பங்கு சரியாக சென்றடைந்து விடும் என வில்சன் கூறினார்.
0 comments :
Post a Comment