ஆஸ்திரேலியாவில் பறக்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த இன்ஜினியர்.
வானத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே பறக்கும் பைக்கை ஆஸ்திரேலியாவை சேர்ந்த இன்ஜினியர் உருவாக்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் நார்த் ரைடு பகுதியை சேர்ந்த இன்ஜினியர் கிரிஸ் மல்லாய். இவர் தரையில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் புதுவகை பைக் ஒன்றை தயாரித்து உள்ளார்.
ஒருவர் மட்டுமே உட்காரும் வகையில் பைக்கை வடிவமைத்துள்ளார். பைக்கின் முன், பின் பக்கங்களில் மரத்தால் செய்யப்பட்ட 2 பெரிய இறக்கைகள் உள்ளன. மற்ற பகுதிகள் கார்பன் இழைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. 1170 சிசி திறன் கொண்ட 4 ஸ்டிரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
பைக் எடை 110 கிலோ. மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லும். அவசர நிலையில் தரையிறங்க பைக்கில் 2 பாராசூட்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பைக்கை ராணுவம், மீட்பு நடவடிக்கைகள், வனவியல் பூங்கா சுற்றுலா, சினிமாக்களில் பயன்படுத்தலாம் என்கிறார் மல்லாய். பைக் குறித்த வீடியோ காட்சியையும் அவர் வெளியிட்டுள்ளார். பைக் விலை ரூ.20 லட்சம். விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment