Thursday, June 23, 2011

வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நிறுவனம்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது.

இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

16 வயதுடைய சிறுமி ஒருவருக்கு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போது குறித்த சிறுமி தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து ஏனைய பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com