Monday, June 27, 2011

ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அமெரிக்கா குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளதாம்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றைத் தயாரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது தொவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் இலங்கைக்கு எதிராக சில உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக சதி செய்து வருகின்றனர். இலங்கையில் தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தப்பிச் சென்ற புலிகளில் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்றுதிரண்டுள்ளனர்.

சில அரச சார்பற்ற நிறுவன்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றன. அச்சக்திகள் அடுத்தடுத்து சதிகளை மேற்கொண்டு வருகின்றன. தருஸ்மன் அறிக்கையின் பின்னர் ஒரு தடவை ராஜபக்ஷ குடும்பத்தை குறிப்பிட்டுக் காட்டி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றப்பத்திரமொன்றையும் தயாரித்தது' என அவர் கூறினார்.

அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கு துரோகமிழைத்ததாகவும் ரணில்- பிரபா ஒப்பந்தம் என்ற பெயரில் பிரபலமான ஒப்பந்தமொன்றின் மூலம் 8 மாவட்டங்களை எல்.ரி.ரி.ஈயினருக்கு கொடுத்ததாகவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் சிங்களமக்களுக்கு அ மெரிக்கா ராஜபக்ச கு டும்ப த்திற்கு எ திரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறும் அமைச்சர் அ மெரிக்காவின் கிறீன் காட் எனப்படும் நிரந்தர வதிவிட அனுமதியை கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com