மீண்டும் தேர்தல் பிரசாரம்
ஒத்திவைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ஜூலை 23 ம் திகதி நடைபெறவிருக்கிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் அம்மன் குழுத்தியின் பின்பு நேற்று புதன்கிழமை பூரணையன்று மீண்டும் ஆரம்பமாயிருக்கிறது.ஆளும் ஜ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசாரப்பணிகள் காரைதீவு சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பூசையுடன் ஆரம்பமானது.அங்கு ஆலய குரு சிவஸ்ரீ உமாமகேஸ்ரவக் குருக்கள் ஆசி வழங்குவதையும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா ஆளும் ஜ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் சகிதம் பிரசாரத்தில் ஈடுபடுவதையும்கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment