மண்டேலாவுடன் மிஷல் சந்திப்பு
அமெரிக்கத் தலைமகள் மிஷல் ஒபாமா, தென் னாப்பிரிக்காவின் முன்னாள் அதி பரும் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கறுப் பின மக்களின் விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறை வாசம் அனுபவித் தவர் நெல்சன் மண்டேலா. சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்ற இவருக்கு இப் போது வயது 92.
நெல்சன் மண்டேலாவை, அமெ ரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும் அவரது குழந்தை களும் நேற்றுமுன்தினம் தென்னாப்பிரிக்கா வில் சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் நடை பெற்ற இந்தச் சந்திப்பிற்கு பின் ஒபாமாவின் குடும்பத்தினர், மண் டேலாவுடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.
திருமதி ஒபாமா, தென்னாப் பிரிக்கா மற்றும் போஸ்வானா ஆகிய நாடுகளுக்கு ஒரு வார நல் லெண்ணப் பயணம் மேற்கொண் டுள்ளார்.
0 comments :
Post a Comment