வெளிநாட்டவருக்கு பிரஜாவுரிமை வழங்குவதில் பிரித்தானியா ஐரோப்பாவில் முதலிடத்தில்.
கடந்த ஆண்டில் இங்கிலாந்து அரசு ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை 2 வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கி இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதன்மூலம் ஐரோப்பிய யூனியனில் வெளிநாட்டவருக்கு தாராளமாக குடியுரிமை வழங்கிய நாடாக உருவெடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் புள்ளிவிவர அமைப்பான யூரோஸ்டட், 2009ம் ஆண்டில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ள குடியுரிமை பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன் விவரம்:
கடந்த 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் குடியேறிய வெளிநாட்டினர் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதிக குடியுரிமை வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து அரசு மட்டும் 2,03,600 வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்கி உள்ளது. இது 2008ம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,29,300ஐ விட 57 சதவீதம் அதிகம்.
குடியுரிமை வழங்கியதில் இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ஜெர்மனியைவிட இங்கிலாந்து இரண்டு மடங்கு அதிகமாக குடியுரிமை வழங்கி உள்ளது.
இதன்படி பார்த்தால், 2060ம் ஆண்டில் 7.9 கோடியுடன் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடிக்கும்.
இந்நிலையில், வெளிநாட்டினருக்கு தாராளமாக குடியுரிமை வழங்குவதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால் இங்கிலாந்தில் குடியுரிமை பெற காத்திருப் போர் கலக்கம் அடைந் துள்ளனர்.
0 comments :
Post a Comment