அமரிக்க அழைப்பாணை நிராகரிப்பு
அமெரிக்க டெக்ஸாஸ் பிராந்திய நீதிமன்றத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ளாது தவிர்த்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. நிதிஅமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சில கொலைச்சம்பவங்கள் குறித்து நட்டயீட்டினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள சில இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு எதிராக குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் முடியும் என்று நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment