குச்சவெளியில் சடலங்கள் மீட்பு
குச்சவெளி கோபாலபுரம் பிரதேச கிணறு ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. 22 மற்றும் 14 வயதுடைய இளைஞர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் சம்பவத்திற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருவதாகவும் குச்சவெளி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment