Tuesday, June 14, 2011

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு லண்டனில் கொலை மிரட்டல்! பின்னணியில் பசீர்!

பிரிட்டனில் பர்தா அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்கொலை மிரட்டலின் பின்னணியில் இஸ்லாமிய மதவாதியான பசீர் உள்ளதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.

கடும்போக்கு கொள்கையுடைய முஸ்லிம்கள்கூட்டு கிழக்கு லண்டனில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டுடன் இணைந்து பசீர் செயற்பட்டுவருவதாகவும், இக்கூட்டில் ஆப்கான், பாக்கிஸ்தான், யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த அதிதீவிர இஸ்லாமிய மதவாதிகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருந்தாளர் தான் பர்தா அணியுமாறு அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் அவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தியமை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேர்மிங்ஹம் தொகுதியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் மஹ்மூத் கருத்து வெளியிடுகையில்,'இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்துள்ளார். அதோடு இவர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் பர்தா அணிய வேண்டியது உங்கள் கடமை என்பதை சகோதர உணர்வோடு யாரும் யாருக்கும் ஞாபகமூட்டலாம். ஆனால் அதற்காக உங்களைக் கொல்லுவோம் என்று அச்சுறுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று பிரிட்டனில் உள்ள பிரபல முஸ்லிம் மதகுரு ஒருவரும் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நோக்கம், மேற்குலகில் இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகளை பரப்புரை செய்வதன் ஊடாக தொடர்ந்தும் பேதங்களை நிலைநிறுத்தி லாபமடைவதேயாகும். மத நல்லிணக்கம், பரஸ்பரப் புரிந்துணர்வு, சமுதாய அமைதி என்பனவற்றுக்கு இவர்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாகவும் இவர்களின் அதிதீவிர இஸ்லாமிய மதவாத போக்கு ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் அவமானம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com