சி.ஜ.ஏ இணையத்தை முடக்கிய லுல்செக் நிறுவனம்.
அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான சிஐஏ யின் இணையம் கடந்த வியாழக்கிழமை இரவு முடக்கப்பட்டது. இவ்விடயத்திற்கு இணையத்தளங்களை கக்பண்ணும் லுல்செக் நிறுவனம் உரிமைகோரியது. எனினும் சில மணி நேரங்களின் பின்னர் குறித்த இணையம் மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளது. குறித்த இணையத்தளத்தை போன்று மேலும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களை லுல்செக் கக்கேஸ் செயலிளக்க செய்ததாக தெரியவருகிறது.
அமெரிக்க செனட்டர் ஒருவர் இணையத்தளத்தையும் குறித்த லுல்செக் குழுவினர் முடக்கினர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இது மிகவும் பளமையான முறையிலையே கைபண்ணபட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சிஐஏ அதிகாரி ஒருவர் கருத்துரைக்கையில் குறித்த லுல்செக் குழுவினர் ஊடக மற்றும் தகவல் அடக்கு முறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருபவர்கள் என்றும் அவர்களால் பெரிதாக எதுவும் செய்து விட முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment