முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்க பிரித்தானியா 9 கோடி ரூபா அன்பளிப்பு.
இலங்கைக்கான பிரிட்டனின் துணைத்தூதர் மார்க்கூடிங் யாழ்ப்பாணத்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பழை, கொல்லன் கலட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடி யேற்றப்பட்ட மக்களை இவர் சந்தித்து அவர்களின் நிலைமை தொடர்பாக நேரில் பார்த்து அறிந்துகொண்டார்.
அத்துடன், புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை மற்றும் சமூகத்துடனான அவரிகளின் ஒருங்கிணைவு என்பன குறித்து இந்த விஜயத்தின்போது மார்க்கூடிங் அவதானித்தார்.
மேலும் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.
வட மாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் சமூக மீள்இணைப்புக்கென பிரிட்டன் சார்பில் சுமார் 90 மில்லியன் ரூபாவை (5 லட்சம் ஸ்ரேலிங் பவுண்) வழங்கவுள்ளதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment