சனல்-4ஆல் வெளியிடப்பட்ட வீடியோ போலியானவை. ஷவேந்திர சில்வா
அமேரிக்க நிவ்யோக் நகரில் நேற்று(ஜூன்-22) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4ஆல் வெளியிடப்பட்ட வீடியோ போலியானவை என ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் பாலித கொஹன மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
இவ் வீடியோ மிகத் திறமையாக திட்டமிடப்பட்டு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாத்தை இலங்கை இல்லாது ஒழித்துள்ளதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இங்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment