சனல்4 வெளியீட்டை அரசு சாதாரணமாக எடுத்துவிடக் கூடாது. எச்சரிக்கின்றார் ரில்வின்
இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கச் செய்ய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணம்படம் உந்துசக்தியாக அமைந்துள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. அதனால் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாதென முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வெளிநாட்டு நாடுகள், சக்திகள், நிறுவனங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட மனித உரிமை பிரச்சினைகளை பயன்படுத்துனகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் இந்த நாட்டு அரசு மனித உரிமையை பாதுகாக்க வேண்டும். ஆனால் மனித உரிமையை பாதுகாப்பது போன்று அரசு காட்டிக் கொள்கிறது என ரில்வின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினை மிகவும் பாரதூரமானது. முழு சமூகமும் அரசும் இப்பிரச்சினையின்பால் கவனம் செலுத்தி தீர்வு பெறாவிட்டால் எமது நாடு பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும். இலங்கை மீது அழுத்தல் செலுத்த விரும்பும் வெளிநாட்டு சக்திகளுக்கு இப்பிரச்சினை ஆதாரமாக, உதாரணமாக அமைகிறது. இது மிகவும் ஆபத்தானது என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment