சனல்4 வெளியீடுகள் அப்பட்டமான பொய். புலிகளின் பணத்திற்கு அடிபணிந்த ஊடகங்கள். கோத்தபாய
பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி இலங்கைக்கு எதிரான காணொலிகளை இன்று வெளியிடவுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான செனல் 4வின் பிரச்சாரங்கள், அடிப்படை அற்றவை என பாதுகாப்பு செயலாளர் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகாக வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் நிதிகளுக்கு அடிபணிந்துள்ள வெளிநாட்டு ஊடகங்கள் இந்த சூழ்சிகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.
செனல் 4 தொலைக்காட்சியின் காணொலி, இலங்கைக்கு எதிரான மற்றுமொரு சூழ்சி என தெரிவித்த அவர், அது தொடர்பாக அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment