சவுதியில் 17 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பணிப்பெண் மீட்கப்பட்டாள்.
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணொருத்தியை அவளது ஏஜமான் கடந்த 17 வருடங்களாக தடுத்து வைத்திருந்நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1997 இல் இருந்து சவுதி அரேபியாவில் ஊதியம் எதுவும் வழங்கப்படாமல் பலவந்தமாக வேலைக்கு வைக்கப்பட்டிருந்துள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
45 வயதுடைய வீரவர்த்தன ஹெட்டியாராச்சிலாகே இந்ராணி மல்லிகா எனப்படும் இப்பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அருகாமையிலுள்ள சவுதி நாட்டைச் சேர்ந்த அன்புள்ளம் படைத்த ஒருவர் அந்நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
அயல்வீட்டுக்காரரின் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்ணின் எஜமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணுக்கான 17 வருடங்களுக்கும் உரிய பணத்தினை வழங்கும்வரை பெண்ணை அங்குள்ள நலன்புரிச் சங்கம் ஒன்றில் தங்கியிருக்கும்படி நீதி மன்று உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எஜமான் சுமார் அறுபது ஆயிரம் சவுதி றியால்கள் செலுத்தவேண்டுமென நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment