1516 குற்றம்புரிந்த நம்மவர் நமீபியாவில் பிணை கோரி நிற்கிறார்.
சுமார் 1516 குற்றச்சாட்டுக்களுக்கு சொந்தக்காரராகி நமீபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பிணை மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்த இலங்கை பிரஜை கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக நமீபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்டனி சுரேஷ்குமார் ஸ்டெனிஸ் என்ற 34 வயதுடைய இலங்கை பிரஜை நமீபிய வின்டோக் மேல் நீதிமன்றில் நேற்று தனது பிணை மனுவை சமர்பித்துள்ளார்.
சுரேஷ்குமாரும் அவருடைய மற்றுமொரு சகாவும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 2ம் திகதி அறிவிக்கப்பட்டனர்.
எனினும் இந்த குற்றச் செயல்களோடு தொடர்புபட்ட மற்றைய சந்தேகநபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமிர்தலிங்கம் புகழ்நான்தி என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபரும் இலங்கை பிரஜையாவார். இவர் கைது செய்யப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இறுதியாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ம் திகதியே குறித்த நபர் இறுதியாக கட்டுடுர பொலிஸில் ஆஜராகி கையொப்பம் இட்டுள்ளார். அதன் பிறகு அவரை காணவில்லை என நமீபிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 comments :
Post a Comment