வாகரையில் 150 KG வெடிகுண்டு செயலிழக்க வைப்பு
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட 150 கிலோ எடையுடைய வெடிகுண்டொன்று இன்று சனிக்கிழமை நண்பகல் செயலிழக்க வைக்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள கதிரைவெளி கல்குவாரி பகுதியில் 150 கிலோ எடையுள்ள வெடிகுண்டொன்றை அந்தப் பிரதேசத்தின் அரசாங்க புலனாய்வு சேவை பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். இந்த வெடிகுண்டு வாகரை இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இன்று செயலிழக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்தப் பிரதேசத்தின் நாசகார வேலைகளுக்கு பயன்படுத்தப்படவிருந்த குண்டாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment