13 நோக்கிய தீர்வுக்கு தயார். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
பதின்மூன்று + முன்னோக்கி நகர்ந்து இனப்பிரச் சனைக்குத் தீர்வுகாண்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளை தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்குப் பகிர்ந்து வழங்க முடியாது என்று இலங்கைத் தரப்பு இந்தியத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாகாண சபைகளுக்கு எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்று இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டபோதே இலங்கைத் தரப்பு மேற்கண்டவாறு தெரிவித்ததாக அறியவந்தது.இதேவேளைஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் தமிழர்களுடனான பேச்சை விரைந்து நடத்துமாறும் தமது தரப்பு வற்புறுத்தியதாகவும் இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருக்கிறார்.
அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும், எல்லாத் தரப்புகளுக்கும் ஏற்புடைய தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின்போது, அரசுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும், தான் ஒரு வெளிநாடு என்ற வகையில் அதனையே அரசிடமும் கூறமுடியும். அதற்கு அதிகமாக எதனையும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment