பிரித்தானிய இலங்கையர் பேரவையினர் - பிரித்தானிய பிரதமர் சந்திப்பு.
பிரித்தானிய இலங்கையர் பேரவையின் உறுப்பினர்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமறுன் அவர்களைச் சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பின்போது இலங்கை-பிரித்தானிய இருநாட்டு உறவு விவகாரங்கள் மற்றும் சமகால நிலவரங்கள் தொடர்பாக பிரதமருக்கு விளக்கப்பட்டதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மகஜரில் இலங்கையில் போர் முடிவடைந்தபின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைள் தொடர்பாகவும் விளக்கப்பட்டுள்ளதாக பேரவையின் உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற்றுக்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment