பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் IMF தலைவர் கைது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ரோஸ் கான், பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் காரணமாக நியூயோர்க்கில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டலொன்றில் வைத்து 32 வயதான பணிப்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது.
62 வயதான டொமினிக் ஸ்ட்ரோஸ் பாரிஸ் நோக்கி செல்லவிருந்த விமானமொன்றில் முதல் வகுப்பில் இருந்தபோது, அவ்விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நியூயோர்க் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கைது பிரான்ஸில் அரசியலிலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியை எதிர்த்து டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது.
ஸ்ரோஸ் கான் இத்தேர்தலில் சார்கோஸியை தோற்கடிக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
2007 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பதவியை பெற்ற பின்னர் அவர் ஒழுங்கீன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.
பொருளாதார பேராசிரியரான அவர் பிரான்ஸின் முன்னாள் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment