Saturday, May 21, 2011

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், கடாபியும். -Chris Marsden-

கர்னல் மௌம்மர் கடாபி, அவருடைய மகன் சைப் அல்-இஸ்லாம், மற்றும் லிபிய உளவுப்பிரிவு தலைவர் அப்துல்லாஹ் அல்-ஷெனுஷி ஆகியோருக்கு எதிராக, யுத்த குற்றங்களுக்கான கைது உத்தரவாணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற முதன்மை வழக்கறிஞர் லூயிஸ் மொரேனோ ஒக்கம்போ (Luis Moreno-Ocampo)இன் கோரிக்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பாத்திரம் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கருவியாக உள்ளது என்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.

உண்மையில், இந்த உத்தரவாணைகள் லிபியாவில் தொடர்ந்து நடந்துவரும் குண்டுவீச்சுக்களின் முதன்மை காரணகர்த்தாக்களான அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிரான்ஸின் மீது தான் கொண்டு வரப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாக யுத்தம் முடிவுக்கு வந்துவிடக்கூடிய எந்த சாத்தியக்கூறையும் தடுக்கும் நோக்கத்தோடும், மற்றும் கடாபியை இன்னும் அதிகப்படியாக தனிமைப்படுத்தும் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு பாதை அமைக்கும் நோக்கத்தோடும் அந்த மூவருக்கு எதிராகவும் மொரேனோ ஒக்கம்போ அவரின் ஆதாரங்களைத் திரட்டியுள்ளார்.

வாஷிங்டன், இலண்டன், மற்றும் பாரீஸைப் பொறுத்த வரையில், மொரேனோ ஒக்கம்போவின் நோக்கத்தைத் தடுக்க அவை இப்போது வெளிப்படையாகவே எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த தலையீடு 'பொதுமக்களைக் காப்பாற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் உள்ளதாக' எரிச்சலூட்டும் வகையில் முறையிடும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தைக் அவை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஐ.நா. தீர்மானத்தை ஒரு சட்டப்பூர்வ மூடுதிரையையும் தாண்டி, லிபிய யுத்தம் சட்டமீறல் மற்றும் கடுங்குற்றத்தன்மையின் புதிய மட்டங்களை விரைவாக எட்டியுள்ளது.

ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதும், திட்டமிடுவதும் யுத்தக்குற்றங்களிலேயே முதன்மையானதும், முக்கியமானதுமாகும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்துதான் மனிதயினத்திற்கு எதிரான ஏனைய குற்றங்கள் இரக்கமின்றி உருவாகின்றன என்றும் நூரெம்பேர்க் நீதிமன்றம் (Nuremburg Tribunal) குறிப்பிட்டது. அந்த தரமுறைகளின்படி, ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரதம மந்திரி டேவிட் கேமரோன், ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கடாபி செய்துள்ள எவ்வித குற்றங்களையும் விட அதிகமான குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளிகளாக உள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நவ-காலனித்துவ நடவடிக்கையை செய்வது அமெரிக்காவும் நேட்டோவும் கடாபிக்கு எதிராகவும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு உதவிகள் வழங்கும் முக்கியமானவர்களுக்கு எதிராகவும் ஒரு படுகொலை கொள்கையை நேர்மையற்ற விதத்தில் நடத்தி கொண்டிருக்கிறது என்பதுடன் சேர்த்து, நூரெம்பேர்க் கோட்பாட்டையும் உறுதி செய்துள்ளது. அவற்றின் நடவடிக்கைகள் திரிப்போலியில் பொதுமக்களை குறிவைக்கும் தீவிர தாக்குதல்களை ஒருங்கிணைத்து கொண்டுள்ளது. “கடாபி தனிப்பட்ட முறையில் நிராயுதபாணியான லிபிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்" என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞரின் அதே குற்றச்சாட்டை, நிச்சயமாக, ஒபாமா, கேமரோன் மற்றும் சார்கோசிக்கு எதிராகவும் கொண்டு வரலாம்.

பெப்ரவரி 15இல் கொண்டு வரப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தை (இத்தீர்மானம் லிபிய நிலவரத்திற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்ட அதிகாரத்தை அளித்தது) மேற்கோள் காட்டி, மார்ச் 3ஆம் தேதி மொரேனோ ஒக்கம்போவின் விசாரணை அறிவிக்கப்பட்டது.

உத்தேசிக்கப்பட்ட இலக்குகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், லிபியாவில் மனிதாபிமானத்திற்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு மூன்று கைது உத்தரவாணைகளைக் கோரியிருந்ததாக மொரேனோ ஒக்கம்போ மே 5இல் முதன்முதலாக அறிவித்தார். ஆபிரிக்க ஒன்றியத்துடன் ஒரு போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் உபயோகமற்ற முயற்சிகளுக்கு வித்திடுவதும், அதேவேளை, கடாபியின் முன்னாள் அதிகாரிகளையும் உள்ளடக்கிய, ஒரு பினாமி அரசாங்கமாக (proxy government) எதிர்ப்பு இடைக்கால தேசிய சபையை (TNC) நிலைநிறுத்த வசதி செய்யும் வகையில், லிபிய ஆட்சிக்குள்ளேயே இருந்த அதிருப்தியாளர்களையும் அது ஊக்கப்படுத்துவதுமே அந்த அறிவிப்பின் நோக்கமாக இருந்தது.

லிபியாவின் தொடர்பு குழுவோடு ரோமில் நடந்த ஒரு கூட்டமும் (இதில் பென்காஜியை மையமாக கொண்டிருக்கும் இடைக்கால தேசிய சபைக்கு பெரும் பணத்தை வாரிவழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது), மே 5இல் ICC அறிவிப்பைத் தொடர்ந்து கடாபி குடும்பம் இருந்த வீட்டின் மீது நேட்டோவின் ஒரு வான்வழி தாக்குதல் சம்பவமும் சரியாக பொருந்தி இருந்தன. கடாபியை அகற்ற வேண்டுமென்று உத்தேசித்திருந்த அந்த தாக்குதல், அவருடைய மகன்களில் ஒருவரையும், மூன்று பேரக்குழந்தைகளையும் கொன்றது.

இதே சூழ்நிலைகளின்கீழ் தான் சமீபத்தில் மொரேனோ ஒக்கம்போவால் அறிவிப்பு செய்யப்பட்டது. அவ்வறிப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக, லிபிய பிரதம மந்திரி அல்-பஹ்தாதி அலி அல்-மௌமொத் ஐ.நா. சிறப்பு தூதர் அப்துல் இல்லாஹ் அல்-கதாப்பிடம் கூறுகையில், “திரிப்போலி உடனடியாக ஒரு போர்நிறுத்தத்தை விரும்புகிறது. இதற்கு ஒத்தவகையில் நேட்டோவும் குண்டுவீச்சை நிறுத்த வேண்டும்,” என்றார்.

அந்த அறிவிப்பு வெளியான அந்த நாள், வெளியுறவு மந்திரி பிரான்கோ ப்ரெட்னி, சாத்தியப்படக்கூடிய ஒரு "தேசிய சமரச அரசாங்கத்தை" உருவாக்கவும், கடாபியை லிபியாவிலிருந்து வெளியேற்றவும் இத்தாலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மீண்டுமொரு முறை, அத்தகை முனைவுகள் துல்லியமாக ஒன்றையும் அளிக்கவும் இல்லை, பயனுள்ளவையாகவும் இருக்கவில்லை. மாறாக கடாபியை அமைதி பேச்சுவார்த்தைக்கு இழுப்பதற்கு பதிலாக, நேட்டோ திரிப்போலியின் மீது விமானத்தாக்குதல்களை அதிகப்படுத்தியது. இது பிரிட்டனிடமிருந்து இன்னும் கடுமையான கோரிக்கைகளை, அதாவது கடாபி அகற்றப்பட வேண்டுமென்ற பகிரங்கமான அழைப்புகள் உட்பட, இன்னும் அதிகமான கொலைவெறி குண்டுவீச்சு பிரச்சாரங்களையும் உட்கொண்டிருந்தது.

"இன்னும் தீவிர இராணுவ நடவடிக்கையை அவர் விரும்புவதாக" முதன்மை இராணுவ தளபதி ஜெனரல் சர் டேவிட் ரிச்சர்ட்ஸ் தெரிவித்தார். நிலையான உள்கட்டமைப்புகளையும் உள்ளடக்கும் விதமாக "நாம் தாக்கும் இலக்குகளின் எண்ணிக்கையை" அதிகரிக்க, நடவடிக்கை விதிமுறைகளை மாற்றுவதற்கும், அதன்மூலம் "ஆட்டம் முடிந்துவிட்டது; அவர் வெளியேற வேண்டியது தான் என்பதை கடாபிக்கு எடுத்துக்காட்டவும்" அவர் அழைப்புவிடுத்தார்.

“நாங்கள் நேரடியாக கடாபியைக் குறிவைக்கவில்லை. ஆனால் நேட்டோவால் தாக்கப்படும் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அவர் இருந்து, அதில் அவர் கொல்லப்பட்டார் என்றால், பின் அது விதிமுறைகளுக்கு உட்பட்டது தான்,” என்றவர் தெரிவித்தார். பிரதம மந்திரி டேவிட் கேமரோனும் "அதே பக்கத்தில்" இருப்பதாக அவர் மேற்கொண்டு தெரிவித்தார்.

கடாபியைக் கொல்வதற்கு தொலைதூர கட்டுப்பாட்டில் (remote controlled) இயங்கும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹக் அதை மறுத்தார். “எது ஒரு சட்டப்பூர்வ இலக்கு என்பதும், யார் ஒரு சட்டப்பூர்வ இலக்கில் இருக்கிறார் என்பதும் அவரவரின் நடத்தையைப் பொறுத்தது,” என்று அவர் கூறினார்.

கடாபிக்கு எதிராக கைது உத்தரவாணைகளை கோருவதற்கான அரசியல் நோக்கமும், அத்துடன் ரிச்சர்ட்ஸின் இறுதி எச்சரிக்கையும், மிகவும் வெளிப்படையானதாகும். அதாவது, பிரிட்டனின் Guardianஇதழ் அதன் ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு எழுத கடமைப்பட்டிருந்தது:

“ஒரு புதிய ஜனநாயக உத்தரவின்படி கடாபி வெளியேற வேண்டுமென வலியுறுத்துவது, ஒருவிஷயம். ஆனால் ஒரு போர் நிறுத்தத்திற்கான எவ்வித பேச்சுவார்த்தைக்கும் ஒரு முன்நிபந்தனையாக அவர் வெளியேற வேண்டும் என வலியுறுத்துவது சாத்தியமே இல்லை. நாட்டைவிட்டு வெளியேறுவது மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு கூண்டில் நிற்க வலியுறுத்துவதென்பது அவர் சண்டையைவிட்டு ஓடுவதை உறுதிப்படுத்துவதாகும். இது ஓர் இராணுவ தேர்வினையே, அதனோடு இன்னும் பல பல பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு மட்டுமே விட்டுவைக்கிறது.”

நேட்டோவின் மூலோபாயம் "குழப்புவதாக" உள்ளது என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதாக Guardian முறையிடுகிறது. இது அதைப்போன்ற விடயமே இல்லை. ஓர் ஏகாதிபத்திய யுத்தத்தை நியாயப்படுத்த யுத்த குற்றங்களின் குற்றச்சாட்டுக்களை மழுப்பும் இதேபோன்ற வழக்கமான ஒன்று, ஐக்கிய நாட்டு சபையின் மற்றொரு நீதிமன்றமான முன்னாள் யுகோஸ்லெவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICTY) சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபொடன் மிலோசெவிக்கிற்கு எதிரான மனிதாபிமான குற்றங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்திய போதே, 1999இல் யுகோஸ்லெவியாவிற்கு எதிராக நேட்டோவின் வான்வழி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டது.

மிலொசெவிக்கிற்கு எதிரான வழக்கு, அவர் பதவியிலிருந்து இறங்கிய ஓராண்டிற்குப் பின்னர் 2001இல் தொடங்கியது. அது நீண்டுகொண்டிருந்த அந்த ஐந்து ஆண்டுகளில், மிலொசெவிக்கின் சுய-தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கத்திய சக்திகளுக்கு மிகவும் தொல்லைகொடுப்பதாக இருந்தது. மாரடைப்பில் அவர் மரணமடைந்ததால், அந்த வழக்குகள் குறைக்கப்பட்டன.

ரிச்சர்ட்ஸ் மற்றும் குழுவின் அறிக்கைகளும், நேட்டோவால் ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கடாபிக்கு எதிராக அத்தகைய பாசாங்கு வழக்குகள் அடிப்படையில் திட்டமிடப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. கோரப்படும் கைது உத்தரவாணை, யுத்த களத்தில் மரண தண்டனை கோரும் குணாம்சத்தைக் கொண்டுள்ளது.

லிபிய யுத்தத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பாத்திரம், ஏகாதிபத்தியத்திற்கு அது ஆற்றிய சேவையின் அதன் முந்தைய சாதனைகளோடு பொருந்தியுள்ளது. ஜூலை 2002இல் அது ஸ்தாபிக்கப்பட்ட போது, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட, படுகொலைகள், மனிதாபிமானமற்ற குற்றங்கள், யுத்த குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட தனிநபர்களைத் தண்டிக்க உருவாக்க ஒரு சர்வதேச அமைப்பாக, மிக முக்கியமான சர்வதேச சட்ட சீர்திருத்தமாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நடவடிக்கைகள் ஐ.நா. சபையில் அதிகாரம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு அடிபணிந்துள்ளது என்பதை அப்போதிருந்தே அது போதியளவிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

ரஷ்யா, சீனா, இஸ்ரேல் மற்றும் இன்னும் ஏனைய டஜன் கணக்கான நாடுகள் உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது நடைமுறையிலோ செய்வதைப்போல, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆளுமையை அங்கீகரிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய நலன்களுக்கான தீவிர மற்றும் வன்முறையான தேடல் என்று வரும் போது, சர்வதேச அமைப்புகளை எந்த வகையில் கணக்கில் எடுப்பதையும் வாஷிங்டன் நிராகரிக்கிறது. ஆனால் கடாபியின் விசாரணையில், அது எதை அங்கீகரிக்கவில்லையோ அந்த நீதிமன்றத்திடமே வாஷிங்டன் சட்டவிரோத குற்றங்களை முறையிடுகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அது கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

உண்மையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள அனைத்து ஆறு சூழ்நிலைகளும் ஆப்ரிக்காவிலேயே உள்ளன. சூடான்-டர்பர் முரண்பாட்டு மற்றும் லிபியா விஷயத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் வெளிநாட்டு கொள்கை அதிகாரங்களின் வாலைப்பிடித்துக் கொண்டு வழக்குகளை ஐ.நா. பாதுகாப்பு சபை தான் தூண்டிவிட்டது. ஒட்டுமொத்தமாக, நீதிமன்றத்தால் கையிலெடுக்கப்பட்ட விசாரணைகள், ஆபிரிக்க சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் பூகோள-இராணுவ முன்னுரிமைகள் மீது கட்டுப்பாட்டை பெற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளால் உந்தப்பட்ட ஒரு புத்துயிரூட்டப்பட்ட உந்துதலோடு பொருந்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட ஏகாதிபத்திய அதிகாரங்களின் அட்டூழியமான எல்லா குற்றங்களையும் விளக்குவது சாத்தியப்படாது. ஆனால் இந்த குற்றங்களில் மிகவும் மோசமான ஒன்றாக 2003 ஈராக் படையெடுப்பு இருந்தது. ஈராக் படையெடுப்பு குறித்து அவர் 240 தகவல் தொடர்புகளைப் பெற்றிருந்ததை ஒப்புக்கொண்ட ஒரு கடிதத்தை மொரேனோ ஒக்கம்போ 2006இல் வெளியிட்டார்.

குற்றமும், அது சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பொறுத்து அதை உருவாக்குவதை வரையறுக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்க்கு அதிகாரம் அளிக்க அரசுகளால் ஒரு சட்ட வழிவகை கொண்டு வரப்பட்டால் ஒழிய, தாக்குதலுக்கான சட்டத்தீர்ப்பு, ஆக்கிரமிப்பால் நடந்த எல்லா குற்றங்கள் ஆகியவை நீதிமன்ற அதிகாரத்தின்கீழ் வராது என்பதற்கு விடையிறுப்பில் உறுதியாக இருந்த இதே மனிதர் இப்போது கடாபியின் வழக்கிற்கு வலியுறுத்துகிறார். கிடைத்திருக்கும் தகவல்கள் "பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட சர்வதேச தாக்குதல்கள்" அல்லது "அதீத தாக்குதல்கள்" என்பதையோ எடுத்துக்காட்டவில்லை என்று பொதுமக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, மொரேனோ ஒக்கம்போ முறையிட்டார்.

யுத்தம் மற்றும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பின் விளைவாக 650,000க்கும் மேலான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களால் மதிப்பிடப்பட்டுள்ள போதும் மற்றும் அபு கரைப் மற்றும் பலூஜாவின் பேரழிவின் போது அம்பலமாகியிருந்த யுத்த குற்றங்களுக்குப் பின்னரும் இது நிகழ்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com