Friday, May 20, 2011

புலிப்பப்படத்தை நோர்வேயினுள் புகுந்து நொருக்கிய டச்சுப் பொலிஸார்.

புலம்பெயர் புலிகளுக்கு ஒரே தஞ்சமாக விளங்கிய நோர்வேயினுள் புகுந்த நெதர்லாந்து பொலிஸார் புலிகளின் புதிய தலைவர் எனப்படுகின்ற நெடியவனை கைது செய்து நோர்வேயின் விசேட நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். நெதர்லாந்தில் பயங்கவராத இயக்கம் ஒன்றின் செயற்பாடுகளுக்காக அங்குள்ள மக்களிடம் பலவந்தமாக நிதி பறிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நெடியவனை டச்சுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வே நாடு புலிப்பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியாக உதவி வந்துள்ளது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதை தொடர்ந்து புலிகளியக்கம் பல பிரிவுகளாக உடைந்தது. அதன் ஒருபிரிவின் தலைவாராக நெடியவன் செயற்பட்டுவந்தார். இப்பிரிவுகளின் இவரது பிரிவே பலம் மிக்கதாகவும், புலிகளின் புலம்பெயர் நிதிக்கட்டமைப்பை தன்னிடம் கொண்டதாகவும் காணப்பட்டது. இந்நிலையில் நெடியவனின் செயற்பாடு இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையப்போகின்றது எனவும், நெடியவனை கைது செய்யுமாறும் இலங்கை அரசு நோர்வேயை கேட்டவந்தது. ஆனால் நோர்வேயிடமிருந்து அதற்கு சரியான பதில் கிடையாத நிலையில் விடயம் வேறுவிதமாக கையாளப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானில் பென்லாடனை அமெரிக்கா கையாண்டாற்போல், நோர்வே அரசு விரும்பியோ விரும்பாமலோ நெதர்லாந்து தனது கைவரிகையை நோர்வேயினுள் புகுந்து காட்டியுள்ளமையை இங்கு காணலாம்.

நோர்வே புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திராதபோதும், நெதர்லாந்து அல்லது ஐரோப்பிய ஒன்றியநாடுகள் அவ்வியக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றபோது, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடு என்றவகையில் நோர்வே கைகட்டிப்பார்க்கவேண்டியது கட்டாயமாகும்.

புலிகளின் இறுதிக் கனவாகவிருந்த நோர்வே புலிக்கட்டமைப்பிற்கு தற்போது ஐரோப்பிய ஒன்றித்தினால் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட புலிகள் தங்களுக்கான கட்டளைகள் நெடியவனிடமிருந்தே வந்தது என தெரியப்படுத்தியதை அடுத்தே தெதற்லாந்து பொலிஸார், ஈரோபோல் மற்றும் இன்ரப்போல் என்கின்ற திணைக்களங்களுடன் இணைந்து செயற்பாட்டில் இறங்கியுள்ளனர். நோர்வேயின் வடமேற்கு பிரதேசத்தில் எய்டால் எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் நெடியவனின் வதிவிடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் இவனை கைது செய்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிற்கு கொண்டுவந்ததுடன் நோர்வேயின் உயர்நீதின்மன்ற வளாகத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர். இவ்வழக்கினை விசாரணைசெய்வதற்காக நெதர்லாந்திலிருந்து நீதிபதிகள் , சட்டத்தரணிகள் ஆகியோரும் நோர்வே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு நோர்வே மண்ணில் நோர்வே அரசினை பார்க்கவைத்து பயங்கர வாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரதம் புலிகளின் முன்னாள் பிரச்சராப் பீரங்கியாகவிருந்து தற்போது புலிகளுக்கு எதிராக தனது கணைகளை தொடுத்துள்ள நபர் ஒருவர் நோர்வேயை சிக்கலில் தள்ளியுள்ளார். நோர்வே நாடு புலிகளின் பலவந்த பணசேகரிப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத நிலையில், குறிப்பிட்ட நபர் நோர்வேயின் சட்டத்துறையினரிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளதுடன், தன்னிடம் புலிகள் 30000 அமெரிக்க டொலர்களை கப்பமாக பெற்றுள்ளதாகவும் அப்பணத்தினை பெற்றுத்தரவேண்டும் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

இவரது வேண்டுதல் நியாயமானது என நோர்வேயிலுள்ள ஊடகங்களும் அரசிற்கு அழுத்தம் கொடுக்கதொடங்கியுள்ளது. TV2 எனப்படும் இத்தொலக்காட்சியில் தோன்றிய குறிப்பிட்ட நபர் புலிகள் தன்னிடம் பலவந்தமாக பணம் பறித்தார்கள் எனத் தெரிவித்தார்.

அதேநேரதம் அதேதொலைக்காட்சியில் தோன்றிய பிறிதொரு தமிழர் தனது உறவினர் ஒருவர் இலங்கை சென்றிருந்தபோது அவரை புலிகள் தடுத்து வைத்திருந்து பணம் கோரியதாகவும், அப்பணத்தினை தான் நோர்வே புலிகளிடம் வழங்கியபோது, தனது உறவினர் வன்னியில் புலிகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தான் நோர்வே புலிகளிடம் வழங்கிய பணத்தினை பெற்றுத்தருமாறும் வேண்டியுள்ளார்.

இந்நிலைமைகள் நோர்வேயை சிக்கலில் தள்ளியுள்ளதுடன் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நிர்பந்தித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com