“செக்ஸ்” புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் சர்வதேச நிதியக தலைவருக்கு வீட்டுக்காவல்.
சர்வதேச நிதியக முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்டாரங்கான் (65) அமெ ரிக்கா நியூயார்க்கில் ஓட்டல் பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்றதாக இவர் கைது செய்யப்பட்டார். நியூயார்க்கில் ரிகெர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மான்ஹாட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலை ஆனாலும் அவர் தனது சொந்த நாடான பிரான்ஸ் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நியூயார்க்கில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும். எப்போதும் அவர் எலெக்ட்ரானிக் கண்காணிப்பு பிரேஷ்லெட் அணிந்திருக்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் குறைந்தது ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் காவலுக்கு இருக்க வேண்டும்.
அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு எப்போதும் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். அவரது அறையின் கதவுகளில் அலாரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் நியூயார்க்கில் உள்ள பிராட்வே பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இருந்தும் அவர் கோர்ட்டுக்கு செல்லவும், தனது நண்பர்களுடன் பேசவும், மருத்துவ பரிசோதனை மற்றும் வாரம் ஒருமுறை மத வழிபாட்டுக்காகவும் வெளியில் செல்ல கோர்ட்டு அனுமதித்துள்ளது.
0 comments :
Post a Comment