யாழ் பிரதி மேயரின் சகோதரனின் சடலம் மர்மமான முறையில் விடுதியிலிருந்து மீட்பு.
யாழ்ப்பாணம், கச்சேரியடி, சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக் மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கச்சேரிக்கு அருகாமையில் உள்ள சோமசுந்தரம் வீதியில்அமைக்கப்பட்டுள்ள விடுதியிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத் துறையைச் சேர்ந்த துரைராசா சுரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் யாழ். மாநகரசபையின் பிரதிமேயர் துரைராசா இளங்கோவின் (றீகன்) சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வாயில் இரத்த கசிவுடன், நுரையும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment