Friday, May 6, 2011

பின்லேடன் மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தின் கமாண்டோ படையினர் கடந்த திங்களன்று சுட்டுக் கொன்றனர். பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் மனைவி, பிள்ளைகள் என குடும்பமே வசித்து வந்தது. சண்டையில் பின்லேடன், மகன் காலித், ஒரு பெண், உதவியாளர் இருவர் என 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பின்லேடனின் 5-வது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராவல்பிண்டி ஆஸ்பத்திரியில் இருக்கும் அவரிடம் பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமயை ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com