ஐ.நா அறிக்கையிலுள்ளவை மேற்கத்தைய ஊடகங்களில் வெளிவந்த குற்றச்சாட்டுகளே.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டிருந்து குழுவினால் வெளியிட்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவும் முன்னர் மேற்கத்தைய ஊடகங்களினால் இலங்கை மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச் சாட்டுக்களேயென கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் பணியாற்றியபோது புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசனமடைவதிலும் பார்க்க இலங்கை தனது செயற்பாட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். தெற்காசிய ஆய்வுக்குழு இவர் எழுதிய கட்டுரையை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் சுருக்கம் வருமாறு,
இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நியமித்த மூவர் கொண்ட நிபுணர்குழுவின் அறிக்கையானது இரண்டு பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. நிபுணர்குழுவின் அறிக்கையானது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ளது.
தமிழ் மக்களின் அடிப்படைத் துன்பங்கள் சட்டவிதியை உறுதிப்படுத்தும்போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும் கட்டமைப்பு, அடிப்படைச் சுதந்திரம் மறுப்பு, சுதந்திர ஊடகம் போன்ற விடயங்கள் தொடர்பாக தீர்வு காணப்படவில்லை என்ற உணர்வே காணப்படுகிறது. இந்த நிபுணர்குழுவின் கண்டுபிடிப்புக்கள் புதியவையல்ல.
இதே குற்றச்சாட்டுக்கள் பல்வேறு வடிவங்களில் சர்வதேச முகவரமைப்புக்களின் செய்திகளில் ஊடகங்களில் மற்றும் ஏனைய அரசாங்கங்களிடமிருந்து 2009 ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு முந்திய காலத்திலிருந்தே வெளிவந்தன. ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச சதியின் ஓர் அங்கமாக முத்திரை குத்துவதன் மூலம் அலட்சியப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்திருந்தது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச ரீதியாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதிலானது மூன்று வகையானதாக காணப்பட்டது. யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின்போது எந்தவொரு பாதிப்புகளும் இடம்பெறவில்லையென ஒட்டுமொத்தமான மறுப்பு, புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையை நியாயப்படுத்தல், ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டை நிராகரித்தல் போன்ற 3 வகையாக அரசாங்கத்தின் பதில்கள் அமைந்திருந்தது.
அரச உயரதிகாரிகளின் நிர்வாகமுறைமை சகதிக்குள் உள்ளன. இந்தியாவின் வீடமைப்பு நிர்மாணத் திட்டத்தில் முன்னேற்றமின்மை இதற்கு நல்ல உதாரணமாகும். ஐ.நா அறிக்கை தொடர்பாக தனது நடவடிக்கையை இலங்கை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றுவழி இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment