பான் கீ மூன் பூதக்கண்ணாடியால் பார்த்தாரா? குமுறுகிறார் பிள்ளையான்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா வின் அறிக்கை தொடர்பாக கருத்துரைத்துள்ள முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சந்திரகாந்தன், வன்னியில் மக்கள் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டமையை பான் கீ மூன் பூதக் கண்ணாடியினால் பார்த்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாழைக்சேனை பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், வன்னியில் சுமார் 5000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடும் எனவும் அவர்களும் புலிகளாலேயே கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் பயங்கரவாதத்தை எமது ஜனாதிபதி அழித்தொழித்தது மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்து காட்டியுள்ளார். அவ்வாறானதோர் சபதத்தை ஜனாதிபதி கொண்டிருந்தமையாலேயே நான் இன்று முதலமைச்சர் எனும் பெயரினை கொண்டுள்ளேனே தவிர தமிழராகிய நீங்கள் என்னை முதலமைச்சராக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment