இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் : நாட்டுக்கு துரோக் ஜீ.எல் : குணதாச அமரசேகர சீற்றம்!
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தேசப்பற்றுஐடய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு இவ்வாறு நாட்டை கட்டிக் கொடுத்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகவும், அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாகவும் இந்த கூட்டு உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம், இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தும் எனவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதிகளின் மூலம் நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத் தன்மைக்கு களங்கம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலின் பேரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சர் பீரிஸ் இவ்வாறான ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் நடவடிக்கைகள் குறித்து தமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
0 comments :
Post a Comment