ஜெனரல் பொன்சேகாவின் வழக்கினை கண்காணிக்க சர்வதேச பிரதிநிதிகள்.
இராணுவக் குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்கேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. அதேநேரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றும் பாராளுமன்ற ஆசனம் பறிபோனமைக்கு எதிராக ஜெனரல் பொன்சேகா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்குகள் நியாயமான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா என்பதை பார்வையிடுவதற்காக உலக பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகள் கொழும்பு வருகின்றனர். இவர்கள் வழக்குகள் இடம்பெறுகின்றபோது நீதிமன்றில பிரசன்னமாயிருப்பர் என தெரியவருகின்றது.
இக்குழவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சட்டத்தரணியான என்பவர் ப ங்கு கொள்கின்றார். இவர் உலகில் பல பாகங்களிலும் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வழக்குளை கண்காணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் இலங்கையில் வழக்கொன்றினை சர்வதேச பிரதிநிதிகள் மேற்பார்வை செய்தது இதுவே முதல்தடவையாக அமைகின்றது.
0 comments :
Post a Comment