ஓமந்தை சோதனைச்சாவடியில் பிரித்தானியப் பிரஜை தீடீர் மரணம்.
பிரித்தானியாவிலிருந்து 27 வருடங்களின்பின் இலங்கை சென்ற தமிழர் ஒருவர் ஓமந்தை சோதனைச்சாவடியில் மாயமான முறையில் மரணமடைந்துள்ளார். பஸ் வண்டியின் இருக்கையிலேயே மரணமடைந்த இவரது பிரேதத்தை பஸ் நடாத்துனரும் சாரதியும் வவுனியா வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.
மரணமடைந்தவர் தும்பளையைச் சேர்ந்த தம்பையா கணேசமூர்த்தி, வயது 72 என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை நாளை இடம்பெறலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment