அங்கவீனனை சுட்டுக்கொன்ற பிள்ளையானின் சகாக்கள் இருவர் கைது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீவிர ஆதரவாளரான மதி என்பவர் நேற்று மட்டுநகரில் அவரது வீட்டில் வைத்து மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் முன்னணியில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். கொலை தொடர்பாக பிள்ளையானின் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டோரை கொலையுண்ட நபரின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளோர் ஆயித்தியமலை பிரதேசத்தினைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஞ்சித், கங்கேஸ்வரன் என தெரியவருகின்றது. இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கிகளும் மீட்க்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்போது இக்கொலையினை பிள்ளையானின் நெருங்கிய சகாவான பிரதீப் மாஸ்ரர் திட்டமிட்டதாகவும் கொலை நடக்குபோது பிள்ளையான் திருமலை சென்றிருந்தாகவும் தெரியவருகின்றது. பிரதீப் மாஸ்ரர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் ரிஎம்விபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கொலையில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டென கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் என நோக்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கொலை அரசியல் பழிவாங்கல் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் கருணா எனப்படுகின்ற அமைச்சர் முரளிதரன் மற்றும் ஆழும் கட்சி சார்பாக பிரதேசத்தில் செயற்பட்டு வந்துள்ளதாகவும், இதனால் பின்னடைவை சந்தித்துள்ள பிள்ளையான் கொலை, வன்செயல் மூலம் அரசியலில் நிலைக்க முயற்சிப்பதாக பிரதேச மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.
கொலையுண்ட நபர் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் புலிப்பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அங்கவீனமானவராகும். இவர் மாற்று ஆயுதக்குழவொன்றின் அங்கத்தினராகவிருந்து பின்னாட்களில் தனது பிரத்தியேக வாழ்வை ஆரம்பித்திருந்தபோது புலிகள் இவரை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் இவரது முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இடுப்பு பகுதியின் கீழ் இயக்கமில்லாமல் சக்கர நாற்காலியிலேயே வாழ் நாட்களை கடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment