நெடியவனை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் தூதரகம்.
நெதர்லாந்து பொலிஸாரின் திடீர் நடவடிக்கையில் நோர்வேயில் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் புலிகளின் புதிய தலைவர் எனச் சொல்லப்படுகின்ற நெடியவனை இலங்கை கொண்டு செல்வதற்கு நோர்வேயிலுள்ள இலங்கை தூதரகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என தேடப்படுகின்ற நெடியவனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக கோரிக்கையை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நோர்வே அரசிடம் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அதேநேரம் நெடியவன் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என புலிகளின் நெடியவன் தரப்பினர் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அரசுடன் 2002 ம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்போது பேச்சுவார்த்தைக் குழுவில் வெளிநாடுகளுக்கு சென்ற நெடியவன் பின்னர் புலிகளின் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவரான ரஞ்சன் லாலாவின் சகோதரனின் மகளை திருமணம் செய்து நோர்வேயில் தங்கிக்கொண்டதுடன், புலிகளின் புலம்பெயர் நிதிக்கட்டமைப்பிற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
புலிகளின் புலம்பெயர் நிதிகள் யாவும் நெடியவன் வசமே உள்ளதாகவும் அப்பணம் தற்போது எந்ந நாட்டு அரசாங்கத்தினால் மடக்கப்படும் என்பதுவுமே ஆய்வாளர்களின் தேடலாகவுள்ளது.
1 comments :
வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்துகொண்டு, தமிழீழம், தாயகம் என்று வன்னியை அழித்து, வன்னி மக்களை பலிகொடுத்து, மிஞ்சியவர்களை நடுத்தெருவில் கையேந்த விட்ட கயவர்கள் எவரும் தகுந்த தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது.
கொடியவனை இலங்கை இராணுவத்திடம் கையளிப்பதிலேயே நோர்வேயின் மனிதாபிமானம் தங்கியுள்ளது.
கயவர்களின் நிதிகள் யாவும் வன்னியில் அல்லல்படும் மக்களுக்கு கிடைக்க நோர்வே நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
Post a Comment