கேபி குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜயலத் ஜயவர்த்தன உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்பித்துள்ளனர்.
கே.பி. தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட இதர விடயங்களைப் குறித்து ஆராய்வது குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கமாக இருக்குமென்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment