கோண்டாவிலில் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு
குடும்பப் பெண்ணின்தாலிக் கொடியை அறுத்ததோடு பெண்ணையும் காயப்படுத்திய நபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் இன்று காலை கோண்டாவில் மேற்குகாரைக்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் குறித்தபெண்ணின் 11 பவுண் தாலிக்கொடிஅபகரிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அருகில் உள்ள கோயிலுக்கு தனிமையில் நடந்துசென்று கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து துவிச்சக்கரவண்டியில் வந்தநபர் இடைமறித்து அவரின் தாலிக் கொடியை அறுத்ததோடு பெண்ணையும் காயப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment