Tuesday, May 24, 2011

தலைவர் உயிருடன் உள்ளார், வந்து போரிடுவாராம் என்கின்றார் வைகோ.

'புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா'
சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் 18வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த 58 வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்ல வேண்டும்?.

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் கருணாநிதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டு வந்து போரிடுவார். வெல்வார். ஈழம் நிச்சயம் மலரும் என்றார்.

1 comments :

Anonymous ,  June 8, 2011 at 7:37 PM  

இந்தக் கோமாளிகளின் வாயால் தான் தமிழினம் நாறிக்கிடக்கிறது.
ஈழத்தமிழரின் பணத்தில் வாழும் கோமாளிகள் அல்லால்படும் ஈழத்தமிழனுக்கு ஒரு நேர உணவுக்கு கூட உதவியதில்லை.
இந்த கோமாளிகளை தமது சுயஇலாபத்திற்காக பணம் கொடுத்து வளர்த்தது புலிகளே.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com