ஜேர்மன் புலிப்பொறுப்பாளர் சிறிரவி, பெண்மீது தகாத வார்த்தை பிரயோகம். கணவர் தர்மஅடி.
தமிழீழத் தேசியச் செயற்பாட்டளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அராஜகம் பண்ணிக்கொண்டிருக்கும் ஜேர்மன் சிறிரவி மீது பொதுமக்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. Essen என்னுமிடத்தில் 07.05.2011 அன்று சனிக்கிழமை மாலை கலைக்கல்லூரி நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பின்போது யேர்மனியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் வெளியில் எடுப்பதற்கு ஒவ்வொரு பாடசாலையும் 600 யூரோ தரவேண்டும் எனவும்> அதைவெளியில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாதெனவும் சிறிரவி கும்பலினால் வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமன்றி ஏற்கனவே 21.05.2011 அன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பரீட்சையை ரத்துச்செய்துவிட்டு 21.05.2011 அன்று Dusseldorf நகரில் யேர்மனியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டை மீளப்பெற்று அவர்களை விடுதலைசெய்யக்கோரி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்வில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தப்பட்டது.
சட்டஒழுங்குகள் மதிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடக்கும் இந்த நாட்டில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற கோரிக்கைகள் எமது விடுதலைக்கெதிரான விளைவையே ஏற்படுத்தும் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள நிர்வாகிகள் மறுத்தனர். மறுத்த நிர்வாகிகளுடன் ஏற்பட்ட வாய்த்தகராறின்போது பெண்நிர்வாகியாகிய சியாமளா ஜெகநீதன் என்பவரைத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி சிறிரவி திட்டியபோது அதைக்கேட்டுக்கொண்டிருந்த பெண்நிர்வாகியின் கணவர் ஜெகநீதன் என்பவர் யெர்மன் பொறுப்பாளர் சிறீரவியை தாக்கினார்.
மக்களிடத்தில் எப்படிப் பழகுவதென்ற விவஸ்தை விளங்காதவர்கள் பொறுப்புக்களில் இருந்து செய்யும் அட்டூழியத்தால் எமது ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டமும் பரிகசிக்கப்படுவதோடு வேற்றினங்கள் மத்தியில் தலைகுனியும் நிலையும் உருவாகும்.
சிறிரவின் அட்டூழியங்களும் அதன்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வும் வெளிக்காட்டப்பட்ட சம்பவங்களில் Essen நகரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றாகும்.
இனியாவது இவர்கள் திருந்துவார்களா?
3 comments :
வாழ்நாள் முழுவதும் வேலை வட்டி இல்லாமல் தமிழ் மக்களை சுத்தி, ஏமாற்றி தங்கள் பொக்கற்றுகளை நிரப்பி சொகுசாக வாழ்ந்துவரும் கள்ள ஆசாமிகளை இனியும் விடக்கூடாது. சந்தியில் அம்மணமாக கட்டிவைத்து செருப்பு மாலை போட்டு விளக்குமாத்தால் நல்ல விசேட பூசை வைக்கவேண்டும்.
ஒரு ஆசாமிக்கு கொடுக்கிற பூசை உலகத்து ஆசாமிகளுக்கு நல்ல பாடமாக இருக்கவேண்டும்.
இனியும் தமிழ் மக்கள் பொறுமையாக இருக்கமுடியாது.
புலிகளது ஆதரவாளர்கள் அனைவருமே வன்முறையின் மறுவடிவங்களே. தலைவர் போதித்த மூல வேதமும் அதுவே. மேற் குறித்த சம்பவமும் அவர்கள் மட்டில் தனித்தமிழ் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதியே
வெளிநாடுகளிலுள்ள ஏமாறும் சோணகிரிகள் இருக்குமட்டும் ஏமாற்ற்றும் ஆசாமிகள் உண்டியலை குலுக்கி பிழைக்கவே செய்வார்கள். முற்பது வருட அனுபவத்தின் விளைவுகளை இன்னும் உணராத செம்மரிகூட்ட தமிழர் சிலர் புலம்பெயர் நாடுகள் இருக்கின்றனர். உசுபேத்திவிட்டதும் புலிக்கொடியுடம் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கிட்டுவிடுங்கள். ஏன் எதற்கு என்ற சிந்தனை தெளிவுஇல்லை.
உண்டியலை குலுக்கியதும் பணத்தை மட்டுமல்ல பவுணையும் போடுங்கள்.
மண்டை கழண்டதுகளால் தானே தமிழினம் உலகெங்கும் நாறிப்போயிருக்கிறது.
Post a Comment