ஜெனரல் பொன்சேகாவின் மகள் தந்தையை பார்வையிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவை அவரது மகள் அபரணா நேற்று சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய அபரணா பொன்சேகா நேற்று சனிக்கிழமை தனது தாயாருடன் சென்று தந்தையை பார்வையிட்டுள்ளார்.
இவர் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவரது தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி நோய்வாயுற்றுள்ளாதாகவும் வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் அவர் தொடர்சியாக மருந்துகளை எடுத்து வருதாகவும் திருமதி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment