சுவாமி அஜராத்மானந்தா ஜீ யின் திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக.
மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனின் சுவாமி அஜராத்மானந்தா ஜீ நேற்று மாலை இறைபதம் அடைந்தார். அன்னாரின் திருவுடல் மக்களின் அஞ்சலிக்காக கல்லடி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல்லாண்டுகளாக மக்கள் சேவைக்காக தன்னை அர்பணித்திருந்த ஜீ அவர்களுக்கு கிழக்கின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இராமகிருஸ்ண மிஷன் தலைவரான அஜராத்மானந்தா ஜீ க்கு வயது 62. நேற்றுமாலை ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சமாதியடைந்ததார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment