மட்டுநகர்ப்பகுதியை சுற்றிவளைத்து இராணுவத்தினர் தேடுதல்.
மட்டுநகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளை சுற்றிவளைத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் தேடுதல் நாடாத்தியுள்ளனர். பிரதேசத்தில் இடம்பெற்ற இரு கொலைகளைத் தொடர்ந்து அதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நோக்கிலேயே இத்தேடுதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. வீடு வீடாக சென்ற படையினரும் பொலிசாரும் சகல வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.
அங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயங்கள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment