அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங்
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பாகிஸ்தானில் அபோடாபாத் நகரில் தங்கியிருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் இரு நாட்டு தலைவர்களும் அச்சம்பவம் குறித்து விவாதித்தார்களா என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்திய அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இரு பிராந்தியங்களிலும் தற்போதைய சூழ்நிலை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் இருந்தது என்று அவர் தெரிவித்தார். பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்கள் அரசு அதிகாரத்தில் உள்ளவர்களா, வெளியே இருப்பவர்களா என்று விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் இதை செய்ய வேண்டும் என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் அதே தினத்தில் இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாகிஸ்தானை தொடர்புபடுத்தி கூறப்படும் விமர்சனங்கள் குறித்து அந்நாட்டு பிரதமர் கிலானி கூறுகையில், பின்லேடன் விவகாரத்தில் பாகிஸ்தானை மட்டும் குற்றம் சுமத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment