தூக்கணாங்குருவிக்கூடு. -வம்சிகன்.-
அவுஸ்திரேலிய நேர வலயம்
பாய்ந்து பாய்ந்து ஓடி வந்தது.
ஆசிய நேர வலயம்
உழைத்துக் கழைத்து உள்ளே வந்தது.
மத்திய கிழக்கு நேர வலயம்
கறுப்புத் திரவத் தங்கத்தை மடியேந்தியபடி
அமைதியை யாசகம் கேட்டு வந்தது.
ஆப்பிரிக்க நேர வலயம்
அகழ்ந்த வைரத்தைத் தேடியபடி வந்தது.
ஐரோப்பிய நேர வலயம்
அட்லாண்டிக் குளத்தைத் தாண்டி வந்தது.
வட அமெரிக்க நேர வலயம்
முதுகுவலியில் நிமிரமுடியாமல் வந்தது.
வடதுருவ நேர வலயம்
உறைநிலை தளர்ந்து உருகியபடி வந்தது.
உலகம் சுற்றிச் சுழன்று
ஒரு புள்ளியில் நின்றது.
வீடு தனிமையில் அமிழ்ந்தது.
தொழிற்சாலைகள் மட்டும்
இயங்கியபடியே.
வீட்டுக்குள்ளேயே தொலைந்துபோன
மனிதர்
வெளியில்
எதைத் தேடுகின்றனர்?
வேலைநேர வேறுபாட்டால்
வலயங்களாய் மனிதர்கள்.
அமிழ்வது புரியாமல்
அகழ்வது ஏன்?
இரவு பகல்
வானவில்லைத் தூர எறிந்துவிட்டு
மின்னலை வலிந்து ஏந்திக்
இனியேனும்
பார்வையாகட்டும்.
May.18. 2011
VII
0 comments :
Post a Comment