பலவந்த நிதிசேகரிப்பில் ஈடுபட்ட புலிகள் பலர் டச்சுப் பொலிஸாரினால் கைது.
நெதர்லாந்தில் தமிழ் மக்களை பணம்பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் புலிகள் பலர் டச்சுப்பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கொலன்ட் நகரின் நீதிமன்றம் இந்த தகவலை ஊடகம் ஒண்றிக்கு தெரிவித்துள்ளது. யுத்தகால வரி என்ற பேரில் புலிகள் சட்டவிரேத நிதி அறவிட்டு வந்ததாக குறித்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது. விசாரனைகள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது. பல தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிலில் கொலன் நாட்டுப் பொறுப்பாளரும் உள்ளடங்ககின்றார். நீதிமன்ற ஆவணங்களில் கொலன்ட் நகரில்; புலிகள் தந்திரமான முறையில் பல கோடி பணத்தை வரியாக அறவிட்டதாக தெரிக்கபட்டள்ளது. பணம் கட்ட மறுத்த பலரும் மிரட்டபட்டுள்ளனர்.
பல ஆயிரம் தமிழர்கள் நெதர்லாந்தில்; வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமானவர்கள் 1980ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரம் அடைந்த பின்னர் நெதர்லாந்திற்கு வந்தவர்கள். 2006ம் ஆண்டில் இருந்து நெதர்லாந்து நாட்டில் புலிகள் தடை செய்யபட்ட பயங்கரவாத இயத்தினராக அறிவிக்கபட்டுள்ளது. ஜரோப்பாவில் புலிகளை சட்டவிரோத நிதிசேகரிப்புக்காக கைது செய்த முதலாவது நாடு நெதர்லாந்து இல்லை, இத்தகய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைகாக சுவிசிலும் பிரித்தானியாவிலும் புலிகள் கைது செய்யபட்டிருந்தனர். நேதர்லாந்து நாட்டில் இன்னும் தண்டனைகள் நீதிமன்றால் கொடுக்கபடவில்லை. ஆனால் பிரித்தானியாவிலும் சுவிசிலும் தண்டனைகள் கொடுக்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்.கிறிஸ்தோபர் மக்டோவில் புலிகளின் பண வசூல் தொடர்வதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment