பிரதீப் மாஸ்ரர் கைது : பிள்ளையான் எச்சரிக்கப்பட்டு விரட்டப்பட்டார்.
மட்டுநகர் பகுதியில் கடந்த 11 திகதி அகங்கவீனர் ஒருவரை சுட்டுக்கொன்றமை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் பிரதீப் மாஸ்ரர் என அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராசா நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட அணியொன்று இக்கைதினை மேற்கொண்டுள்ளதுடன், பிரதேசத்தில் தங்கியிருந்து மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட இரு தொலைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் மாஸ்ரர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கவீனனான மதி எனப்படும் இராசமாணிக்கம் மதியழகனை யை சுட்டுகொன்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியான தகவல்களின் அடிப்படையில் பிரதீப் மாஸ்ரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிற்பகல் மட்டுநகரில் வைத்து பிரதீப் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கொழும்பிலுருந்து சென்றிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட அணியினர் தங்கியிருந்த அலுவலகத்திற்கு தனது சகாக்கள் சிலருடன் சென்ற பிள்ளையான், பிரதீப் மாஸ்ரரை விடுவிக்ககோர்p சச்சரவு செய்ய முற்பட்டபோது, அலுவலகத்திலிருந்து வெளியேவந்த அணியின் தலைமை அதிகாரி, கடமைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் எவ்வித பாரபட்சமுமின்றி நீர் இப்போதே கைது செய்யப்படுவீர் எனவும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து பிள்ளையானை விரட்டியடித்ததாக தெரியவருகின்றது.
அதேநேரம் மேற்படி விசாரணைகளின்போது கொலைத்திட்டமிடலில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு உண்டென தெரியவருவதாகவும், அனால் பிள்ளையானது பதவி காரணமாக கைது தாமதமாகவதாக நம்பப்படுகின்றது. விசாரணைகள் முற்றுப்பெறும்போது கொலையில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டென்பதற்கான ஆதாரங்கள் உறுதிசெய்யப்படின் பிள்ளையான் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொலைசெய்யப்பட்டுள்ள நபர் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கினை பெற்றிருந்ததுடன் அங்குள்ள ஆலயங்கள் மற்றும் சங்கங்கள் பலவற்றின் நிர்வாகங்களில் முக்கிய பங்கினை வகித்து வந்துள்ளார். அத்துடன் அண்மைக்காலமாக கருணாவுடன் இணைந்து செயற்பட்டும் வந்துள்ளார். எதிர்வரும் மாநகர சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மேயர் வேட்பாளராக களமிறங்கவும் திட்டமிட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் மதியின் மக்கள் செல்வாக்கு கண்டு மிரண்ட பிள்ளையான் இவரை தன்னுடன் இணைந்து செயற்படவேண்டும் என நிர்பந்தித்துள்ளார். மதி நிர்பந்தத்திற்கு இணங்காதபோது பிரதேசத்தில் அவர் ஆலயநிர்வாக சபைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலுமிருந்து சுயமாக விலகவேண்டும் அன்றில் விளைவுகள் விபரிதமாக அமையும் என மதி பிள்ளையானால் நேரடியாக மிரட்டப்பட்டதாக மதியின் உறவினர்கள்
மறுபுறத்தில் பிரதீப் மாஸ்ரரின் கைதினை கண்டித்து மட்டுநகர் பிரதேசத்தில் பிள்ளையான் நாளை ஆர்பாட்டம் ஒன்றினை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரியவருகின்றது. அதேநேரம் இவ்வார்ப்பாட்டத்தில் எவரும் கலந்து கொள்ளக்கூடாது எனவும் கைதானது அங்கவீனர் ஒருவரை கொன்றமைக்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் மக்களுக்கு ஒருதரப்பினர் விளக்கி வருவதாகவும் அறியமுடிகின்றது. நாளைய ஆhப்பாட்டத்தை பிள்ளையானால் நாடாத்த முடிந்தால் அவரது மக்கள் செல்வாக்கினை கணிக்கமுடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை தொடர்பாக குறிப்பிட்ட மதுச்சாலையில் தொழில்புரிந்துவந்த இரட்ணம் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலையின் பின்னணியிலும் ஆயுதக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் உள்ளளெரன தெரியவருகின்றது.
2 comments :
தமிழ் தமிழீழம் என்று ஆயுதம் ஏந்திய எவனும் திருந்தி விடப்போவதில்லை.
காரணம் அவர்களின் ஆரம்பமே மிகவும் தவறு.
குற்றவாளிகள் கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
உண்மைவிளங்கி
ஒரு தமிழினத்தை அழித்த எவனுக்குமே தமிழனை ஆழ எந்த ஒரு உரிமையுமில்லை. கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் பணம் பறித்தல் போன்ற நிகழ்வுகள் இந்த பிள்ளையான், மற்றும் கருணா போன்ற தமிழ் துரோகிகளால் நட்த்தப்படுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆயுத்தாரிகளான இந்த கொடிய கொலைகார்கள் உயிருடன் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். எதிரிகள் மன்னிக்கப்பட்டாலும் துரோகிகள் மன்னிக்கப்படக்கூடாது என்பது மரபு. காலனும் காலமும் விரைவில் பதில் சொல்லும்
Post a Comment