கறுவாக்கேணியில் இளம் வர்த்தகரின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பகுதியில் இளம் வர்த்தகர் ஒருவர் இன்று பிற்பகல் அவரது கராச்சியில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கறுவாக்கேணி, பிரதான வீதியில் கராச் ஒன்றை நடாத்திவரும் மணிவண்ணன் (38வயது) என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் வெளியில் சென்று விட்டு கராச்சுக்கு திரும்பிய அவர் தனது கராச்சுடன் சேர்ந்துள்ள வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்கு உள்ள அவரது அறையில் இருந்து நீண்டநேரமாக வெளிவராத நிலையில் அங்கு சென்று பார்த்தபோது தரையில் உயிரிழந்த நிலையில் அவர் இருந்தாகவும் அவரது வீட்டு கூரையில் தூக்கு கயிறு தொங்கிய நிலையில் இருந்ததாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.
இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்ந்துவந்ததாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
சடலம் மீட்க்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment