ஸ்கைப்பை தன்வசப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட்
இணையதள தொலைபேசி நிறுவனமான ஸ்கைப் டெக்னாலஜீஸை, மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசன் நிறுவனம், தன்வசப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முனன்ணி நாளிதழான தி வால்ட் ஸ்டீரிட் ஜர்னலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்கைப் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை, மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசன் நிறுவனம், 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொலைதொடர்பு, தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு உள்ளி்ட்ட துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழ திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு நிக்லஸ் ஜென்ஸ்டீரோம் மற்றும் ஜானஸ் பிரிஸால் உருவாக்கப்பட்டது இந்த ஸ்கைப். துவக்கத்தில் பைல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனமாகவும், பின் இசை தொடர்பான சிறந்த தொழில்நுட்பமாக உருப்பெற்று, பின் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களால் மேம்படுத்தப்பட்டு, தற்போதைய அளவில், ஸ்கைப் மிகச்சிறந்த மற்றும் முன்னணி இணையதள தொலைபேசி சேவை வழங்கும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. 2005ம் ஆண்டில், ஸ்கைப்பை, ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள இ பே நிறுவனம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தன்வசப்படுத்தியது. ஒரு நிறுவனத்தின் பிடியில் மட்டும் இருந்த ஸ்கைப், 2009ம் ஆண்டில் இ பே நிறுவனம், இதன் 70 சதவீத பங்கை சில்வர் லேக் மற்றும் ஆன்ட்ரிசென் ஹோரோவிட்ஜிற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு விற்றது. இதனையடுத்து, 3 நிறுவனங்களின் பிடியில் ஸ்கைப் வந்தது.
மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர்களை தன்னகத்தே கொண்ட ஸ்கைப் நிறுவனம், தற்போது கடனில் சிக்கி தத்தளித்து வருகிறது. அதன் நீண்டகால கடன், 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதனையடுத்து ஸ்கைப்பை தன்னகத்தே கொண்டிருந்த நிறுவனங்கள், இதை விற்க முடிவெடுத்தன. இணையதள ஜாம்பவானான கூகுள் பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. இதில் மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வாங்குவதற்கு முன்வந்துள்ளது. இதனையடுத்து, ஸ்கைப்பை பெரும்பாலும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனம் வாங்குவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment