சுவிஸில் கரும்புலி கைது.
சுவிற்சர்லாந்து நாட்டில் இந்து-பௌத்த கலாச்சார மன்றம் என புதியதோர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் இவ்வமைப்பின் உருவாக்கம் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் பரவலாக வினியோகத்திற்கு உள்ளாகிவருகின்றது. குறிப்பிட்ட துண்டுப்பிரசுரத்தில் அமைப்பினை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் வழங்ங்கப்பட்டுள்ளது.
அத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், குறிப்பிட்ட அமைப்புக்கு எதிரான தனது மதவாத கருத்தினை வெளிப்படுத்தியதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார். அப்போது நீங்கள் யார் பேசுகின்றீர்கள் என அமைப்பினை சேர்ந்தவர் கேட்டபோது, நான் கரும்புலி பேசுகின்றேன் என்றுள்ளார். அப்படியா சங்கதி சற்று பொறுத்திருங்கள் என தெரிவித்த இந்து - பௌத்த கலாச்சார மன்றத்தினை சேர்ந்த நபர் உடனடியாக கரும்புலியின் மிரட்டலை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். விரைந்து செயற்பட்ட பொலிஸார் கரும்புலியை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது:
0 comments :
Post a Comment